Published on 21/11/2020 | Edited on 21/11/2020
![tamilnadu voter id list election commission](http://image.nakkheeran.in/cdn/farfuture/6jwCSjhV0nG2sOTanxUvCWJIpCslFGbSeLuSNddMhzE/1605928771/sites/default/files/inline-images/voter%208999.jpg)
வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய தமிழகம் முழுவதும் இன்றும், நாளையும் வாக்காளர் சிறப்பு முகாம் நடக்கிறது. வாக்காளர் சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், வாக்காளர்கள் தங்களது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைத் திருத்தம் செய்துக்கொள்ளலாம்.
தமிழகம் முழுவதும் உள்ள அந்தந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்து தமிழகம் முழுவதும் ஜனவரி 20- ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.