திருச்சி லலிதா ஜுவல்லர்ஸ் கொள்ளை டீமின் முக்கிய குற்றவாளியான முருகனின் அக்கா மகன் சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைய வைத்துள்ளனர். இதுபற்றி திருவண்ணாமலையின் முக்கிய காவல்துறை அதிகாரி கள் சிலரிடம் பேசியபோது, "சுரேஷ் திருவண்ணாமலை நீதிமன்றத்தில் சரணடைய போகிறான் என்கிற தகவல் கிடைத்ததுமே அலர்ட்டானோம். தீவிரமாக வாகன சோதனை நடத்தி னோம். அதனையும் மீறி வழக்கறிஞர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் ஹெல் மெட் போட்டபடி நகருக்குள் வந்தபின் காருக்கு மாறியுள்ளான். போக்கு காட்டிவிட்டு செங்கம் நீதிமன்றத்தில் சரணடைய வைத் துள்ளார்கள். அங்கு சரணடைய வைத்துள்ளதன் பின்னால் சாதிப் பாசமும், சில முக்கியமானவர்களின் கைங்கர்யமும் உள்ளது. சுரேஷ் இரண்டு தினங்களுக்கு முன்பே திருவண்ணாமலை வந்து இங்குள்ள ஒரு கிராமத்தில் தங்கியதாக கூறப்படுகிறது'' என்றவர்கள், இதில் சாதிப்பாசம் உள்ளது. அதனடிப் படையில் அரசியல் செல்வாக்கும் சட்ட உதவிகளும் கிடைக்கின்றன.
குட்டி தாதாக்களுக்கு அரசியல் செல்வாக்கு உள்ளதால் ஒரு கட்டத்துக்கு மேல் நெருங்க முடிய வில்லை. இருந் தும் அத்தனையும் நோட் செய்தே வருகிறோம். தேவையான நேரத்தில், சரி யான அதிகாரி வந்தால் கை, கால்கள் பாத் ரூமில் முறியும்'' என்றார்கள். நீதிமன்றத்தில் சரண்டரான சுரேஷை கஸ்டடியில் எடுக்க திருச்சி துணைஆணையர் மயில்வாகனன் டீம், அதற்கான பணிகளை வெள்ளியன்று மேற்கொண்டது. இந்த நிலையில், முருகன் பெங்களூரு எம்.ஜி ரோடு மேயோ ஹால் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ள தகவல் வெளியானது. பெங்களூரு பானசவாடி காவல்நிலையத்தில் முருகன் மீது 83 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.