தமிழகத்தில் இருந்து ரயில் டிக்கெட்டுகளைப் பதிவு செய்தால் பயணிகளுக்கு இந்தியில் குறுஞ்செய்தி வருவதாக, பல்வேறு ரயில் பயணிகள் நலச்சங்கம் சார்பில் மத்திய ரயில்வே அமைச்சகத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், ரயில் டிக்கெட்டுகள் தொடர்பான குறுஞ்செய்தி ஆங்கிலத்தில் அனுப்பப்ட்ட நிலையில் இந்தியில் வருவதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, ரயில் டிக்கெட் முன்பதிவு குறுஞ்செய்தி இந்தியில் வருவதற்கு தி.மு.க. எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அனைத்துத் தளங்களிலும் இந்தியைத் திணித்து மக்களைக் கொடுமைப்படுத்துவதை நிறுத்துங்கள். இந்தியாவில் பல மாநிலங்களில் பெரும்பாலான மக்களுக்கு இந்தி தெரியாது; மாநில மொழிகளில் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். அந்த மாநில மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.