Published on 26/11/2019 | Edited on 26/11/2019
பள்ளி மாணவர்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்துவது குறித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். அதில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என கூறியுள்ளது.

மேலும் காலை, மாலை நேர இடைவேளை, மதிய உணவு நேரத்தில் மாணவர்கள் போதுமான அளவு நீரை அருந்த வேண்டும் என்றும், மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை மேற்பார்வையிடவும், அறிவுறுத்தவும் ஆசிரியர்களை வலியுறுத்தியுள்ளது.