Published on 25/08/2020 | Edited on 25/08/2020

தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய ஆறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை நகர், புறநகரில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வேடசந்தூரில் 13, முசிறி, பரமத்தியில் தலா 9, தேவாலாவில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.