மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் போல உள்ளது இந்த ஆட்சி என அமமுக துணைபொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்,
இடைத்தேர்தல்களில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வெற்றியின் மூலம் இந்த ஆட்சி முடிவிற்கு வரும். மருத்துவமனையில் உள்ள நோயாளிகள் போல உள்ளது இந்த ஆட்சி. முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் புகார் வந்துகொண்டிருக்கும் நிலை உள்ளது, இந்த நிலை ஆட்சி முடிவிற்கு வருவதற்கான நிலைதான்.
இந்த மின்வெட்டு ஆட்சியை முடிவிற்கு செல்லும் நிலையை உணர்த்துகிறது. முந்தைய திமுக ஆட்சியை கிண்டல் செய்யும் நிலையில் தான் திமுக ஆட்சிக்கு முடிவிற்கு வந்தது. ஊழல் தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளது. அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லாமலா நீதிமன்றம் விசாரணைக்கு உட்படுத்தியது என்றார். குருட்டு அதிர்ஷ்டத்தில் கிடைத்த இந்த ஆட்சியில் கிடைத்ததை சுருட்டிகொள்வோம் என்ற நிலையில் உள்ளது.
எம்.எல்.ஏக்களை காப்பாற்றும் அரசாக உள்ளது மக்களின் மீது அக்கறை இல்லை, ஊழல்வாதிகளுக்கு எங்கள் கட்சியில் இடமில்லை, இடைத்தேர்தலில் வெற்றி உறுதி, நாங்கள் தேர்தலுக்கு தயார் உறுப்பினர் சேர்க்கை தொடங்கி 3 மாதமாக நடைபெற்று வருகிறது. திருப்பரங்குன்றத்தில் 7ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் பொதுக்கூட்டமும், 10ஆம் தேதி திருவாரூரில் பொதுக்கூட்டமும் நடைபெறவுள்ளது.
ஆர்.கே.நகர் போன்று இடைத்தேர்தலில் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் இரண்டாம் இடத்திற்கு தான் ஆளும் கட்சியும் பிரதான கட்சிகளும் போட்டியிடுகின்றன. எம்.எல்.ஏக்களை தக்க வைப்பதற்காக சட்டவிரோத மணல் குவாரிகளை வழங்குவதிலயே இந்த அரசு குறியாக உள்ளது.
முறைகேடுகளை முறைப்படுத்தும், லாபம் பார்க்கும் அரசாக உள்ளது இந்த அரசு. ஊழல் தொடர்பாக எதிர்கட்சியான திமுக வழக்கு தொடந்துள்ளதால் நாங்கள் சட்டபோராட்டத்தின் மூலமாக அதிமுக கட்சியையும், இரட்டை இலையையும் மீட்போம், இந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதுதான் எனது பிரதான நோக்கம், எங்களது 18 எம்.எல்.ஏக்களின் எண்ணம் முதல்வரை மாற்ற வேண்டும் என்பது தான். இவ்வாறு அவர் கூறினார்.
Published on 12/09/2018 | Edited on 12/09/2018