வேலூர் மாவட்டம் ஆம்பூரில் ஷேர் ஆட்டோவில் முன்பக்கம் ஓட்டுநர் சீட்டில் பயணம் செய்த 2 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் மல்லிகை தோப்பு பகுதியை சேர்ந்த முனியசாமி என்பவரின் மகள் திவ்யாகரசி. இவர் நாகேஸ்வரம் அருகிலுள்ள இந்து ஆரம்ப பள்ளியில் இரண்டாம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சிறுமி திவ்யகரசியும் அவரது சகதோரனுமான லோகேஸ்வரனும் கார்த்திக் என்பவரின் ஷேர் ஆட்டோவில் பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் இன்று காலை சுமார் 15 குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்ட கார்த்திக் இடம் பத்தவில்லை என திவ்யகரசியை ஓட்டுநர் இருக்கையில் அழைத்து சென்றுள்ளார்.
பள்ளி செல்லும் வழியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிற நிலையில் அந்த பணிகளுக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளங்களில் ஏறி இறங்கி சென்றிருக்கிறது. அப்படி செல்லும்பொழுது ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டாம் வகுப்பு சிறுமி திவ்யகரசி ஆட்டோவிலிருந்து கீழேவிழ படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட திவ்யகரசி இறுதியில் மருத்துவ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மருத்துவமனையில் இறந்துபோன சிறுமி திவ்யாவின் சடலத்தை பார்த்து அவரது பெற்றோர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்திய. விதிமுறைகளை மீறி அதிக அளவில் நபர்களை ஆட்டோவில் திணித்து செல்வது குற்றம். இந்த விதிமீறல் செயலில் ஈடுபட்டு சிறுமி உயிரிழந்திருக்கும் நிலையில் ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக் கைது செய்யப்பட்டுள்ளார்.