புகார் கொடுத்தும் நீண்ட நாட்களாக பழுது நீக்காமல் மின்வாரியம் அலைக்கழித்த நிலையில், தானே பழுதினை சரி செய்ய மின் கம்பம் ஏறிய விவசாயி மின்சாரத்திற்கு பலியாகியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ்.மங்கலம் தாலுகா தேவன்கோட்டை பஞ்சாயத்த்திற்குட்பட்ட அண்ணாமலைநகர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பால்ராஜ். இவரது வீட்டிற்கு வரக்கூடிய மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், இதனை சரி செய்து பழுது நீக்கித்தருமாறு ஆர்எஸ். மங்கலம் மின்வாரிய அலுவலகத்திற்கு பலமுறை புகார் கொடுத்தும் புகாரினை ஏனோ கண்டு கொள்ளவில்லை அலுவலக ஊழியர்கள். இருப்பினும், தினசரி 10 கடந்த 10 நாட்களாக மின்வாரிய அலுவலகத்திற்கு அலைந்து திரிந்தவர், ஒருக்கட்டத்தில் தானே மின்பழுதை சர் செய்துவிடலாம் என்ற எண்ணத்தில் தனது வீட்டிற்கு அருகிலுள்ள மின்கம்பத்தில் ஏறியுள்ளார் விவசாயி பால்ராஜ். பாதிகம்பம் ஏறிய நிலையில் பாரம் தாங்காமல் மின்கம்பம் சரிந்து விழ, இவரும் மின்கம்ப வயரில் விழ மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
"இந்த மின் கம்பம் மட்டும் அல்லாது கிராமத்தில் உள்ள 10- க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் எலும்பு கூடாக காட்சி அளிக்கிறது.! மின் இணைப்பு துண்டிப்பு ஏற்பட்டால், அதை சரி செய்வதற்கு ஊழியர்கள் இங்கு வரவே அச்சப்படுகிறார்கள். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் அதிகாரிகள் அலட்சிய போக்கையே கையாளுகிறார்கள்." என குற்றம் சாட்டுகிறார்கள் அண்ணாமலை நகர் மக்கள். மின்வாரியத்தின் அலட்சியத்தால் விவசாயி உயிர் பறிபோனதால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.