'உலகத்தையே ஆட்டிப் படைக்கும் கரோனா இப்போது, உள்ளூர் வரைக்கும் பரவிவிட்டது. இதன் சீரியஸ்னஸ் தெரியாம ஜனங்க ரோட்ல நடமாடுறது ரொம்ப வருத்தமாக இருக்கிறது தம்பி' என்று நம்மிடம் வேதனையை பகிர்ந்து கொண்டார் காவல்துறை நண்பர்.
கரோனா என்னும் கொடிய நோயை கட்டுப்படுத்தனும்னா 21 நாட்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். வெளியே சுத்தக் கூடாது. அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுங்கள் என்று அரசாங்கம் எவ்வளவோ எடுத்து சொல்லியும் பலன் இல்லை.
எல்லா ஊர்களிலும் இளைஞர்கள் மட்டுமின்றி நல்ல படிச்ச பெரிய மனுசன்களும் தேவையின்றி சாலைகளில் சுற்றித் திரிகின்றனர். சென்னை போன்ற பெருநகரங்களில் போலீஸார், பொதுமக்களை அன்பாக கையெடுத்து கும்பிட்டும் பலன் இல்லை. இன்னமும் சாலைகளில் தேவையில்லாத நடமாட்டம் இருக்கிறது. அதனால், இப்போது பல நகரங்களில் போலீஸார் லத்தியை சுழற்ற ஆரம்பித்துவிட்டனர்.
இனிமேலாவது மக்கள் திருந்தினால் சரி...! காவல்துறை நண்பர்களே.. ஊரடங்கின் உண்மையை உணர்த்த, லத்தியை தாராளமாக சுழற்றுங்க.!.