Published on 24/08/2020 | Edited on 24/08/2020
![tamilnadu chief secreatry discussion to district collectors coronavirus](http://image.nakkheeran.in/cdn/farfuture/foIDhifJDpzNWk6KYQ8JIeu7grDOfNhveZRVKTbhZpg/1598251494/sites/default/files/inline-images/sh222%20%281%29.jpg)
அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி காட்சி மூலம் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று பிற்பகல் 03.00 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார்.
இதில் கரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கில் தளர்வுகள் அளிப்பது, இ-பாஸ் முறையை ரத்துசெய்வது குறித்து உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு ஆகஸ்ட் 31- ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், தலைமைச் செயலாளர் ஆலோசனை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் அறிவிப்பின்படி, புதுச்சேரி அரசு நேற்று முதல் இ-பாஸ் முறையை ரத்து செய்வதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.