![tamilnadu chief minister mkstalin pressmeet at krishnagiri district](http://image.nakkheeran.in/cdn/farfuture/lQempeHKugBowfYlM4ITFO83PWe_uUbi3okrRgvAogs/1628140552/sites/default/files/inline-images/cm3232323.jpg)
கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளியில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தைத் தொடங்கிவைத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, "இந்தியாவிற்கே முன்னோடி திட்டமாக 'மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்' தொடங்கப்பட்டுள்ளது. கரோனா காலத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் அர்ப்பணிப்புடன் பணியாற்றினர். மருத்துவத்தைத் தேடி மக்கள் செல்லும் சூழலை மாற்ற புதிய திட்டத்தைத் தமிழ்நாடு அரசு தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் ‘மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்’ தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் 40க்கும் மேற்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக 30 லட்சம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு கோடி பேருக்கு சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. ‘மக்களைத் தேடி மருத்துவம் திட்ட’த்தின் மூலம் டயாலிஸிஸ் சிகிச்சை அளிக்க பயிற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ‘மக்களைத் தேடி மருத்துவம் திட்ட’த்தின் கீழ் 25,000 பேர் களப்பணியாற்றுவார்கள். விவசாய நிலங்கள் பாதிக்கும் வகையில் எந்தத் திட்டமும் அனுமதிக்கப்படாது" என்றார்.