Published on 10/04/2020 | Edited on 10/04/2020
சென்னை தலைமைச் செயலகத்தில் நாளை (11/04/2020) மாலை 05.00 மணிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்தும், ஏப்ரல் 14- ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட வாய்ப்பிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
![tamilnadu cabinet meeting held on tomorrow](http://image.nakkheeran.in/cdn/farfuture/leZlbh3byQQiD_w0yQinosbCD7pRTvD3Z-DLwulLmGI/1586508835/sites/default/files/inline-images/cabinet%20meeting999.jpg)
இதனிடையே பிரதமர் நரேந்திர மோடி நாளை (11/04/2020) காலை 11.00 மணிக்கு அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை செய்கிறார். இதில் மாநிலங்களில் எடுக்கப்பட்டு வரும் கரோனா நடவடிக்கைகள் தொடர்பாகவும், நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்க உள்ளார்.