Published on 08/01/2020 | Edited on 08/01/2020
தமிழக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த 06- ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது இரண்டாவது நாளாக இன்று (08.01.2020) விவாதம் நடைபெற்றது.
அப்போது சட்டப்பேரவையில் பேசிய தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், "இளைஞர்கள் அரசு வேலைக்கு ஆசைப்படாமல் தொழில் முனைவோர்களாக முயற்சி செய்ய வேண்டும். மேலும் ஒரு ஹெக்டரில் மீன் வளர்ப்பு தொழில் செய்தால் 10 மாதத்தில் ரூபாய் 1 லட்சம் வருமானம் ஈட்டலாம். மீன் வளர்ப்பு தொழிலுக்கு அரசு மானியம் வழங்க தயாராக உள்ளது. மீன் அதிகம் சாப்பிட்டால் மாரடைப்பு, புற்றுநோய், கண் பார்வை கோளாறு உள்ளிட்டவை வராது." இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.