Skip to main content

'மனதில் நின்ற கவிதைகள்' - கருத்தரங்கம்!

Published on 28/02/2019 | Edited on 28/02/2019

சென்னை அசோக்நகர் வட்டார நூலகத்தில் ’மனதில் நின்ற கவிதைகள்- ஓர் அறிமுகம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.

 

FHFGHGFH

 

வாசக சாலை சார்பில் இந்த கூட்டத்தில் இலக்கிய ஆர்வலர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர். 

முதலில் கவிஞர் நகுலன் கவிதைகளை பேச வந்த  பிரபஞ்சரசிகன்,  தான் திரைத்துறையில் உதவி இயக்குனராக இருப்பதாக அறிமுகம் செய்துகொண்டு ,  நகுலனின் கவிதைகளை வாசித்ததில் கவிதைகள் மீது தனித்த ஈர்ப்பு வந்திருப்பதாகவும்,  தொடர்ந்து கவிதை வானில்  சிறகடிக்க விரும்புவதாகவும்  கூறியவர், தன் புரிதல்களையும், கவிதை ஏற்படுத்திய ஆழ்மனச் சிந்தனைச் சிதறல்களையும் அதன் தளத்தில் ஏற்படும் விரிதல்களையும்  இனிமையாகப் பகிர்ந்து கொண்டார். 
அடுத்து, கவிஞர் அழகு நிலாவின் கவிதைகளைப் பேசிய  வழக்கறிஞர் சுசிலா,  அழகு நிலாவின் கவிதைகள் எளிமையகவும் வாழ்வின் அனுபவங்களோடு ஒத்துப்போவதாகவும் சொல்லிப் பாராட்டினார்.   மேலும் அவருடைய கவிதைகளை மீண்டும் மீண்டும் வாசித்ததில், வெவ்வேறு விதமான புரிதல்கள் ஏற்படுவதாகச் சொல்லி, கவிதைகளையும் சான்றாக்கினார். 

மூன்றாவதாக பேச வந்த கவிஞர் வீரசோழன் திருமாவளவனோ, கவிஞர் ஆரூர் தமிழ்நாடனின் ன் கவிதைகள் குறித்துப்  பேசினார். இவரது கவிதையில் காணப்படும் இலக்கிய நயம், வாழ்வியல் கூறு, போன்றவற்றை விவரித்து எல்லோரது கவனத்தையும் கவர்ந்தார்.

நிகழ்வின் முடிவில் ஒரு சிறுமி, பேசியவர்களால் உந்தப்பட்டு தானும் பேச விரும்பி, தன் மழலை மொழியில் சில வார்த்தைகள் பேசிவிட்டு அமர்ந்தார். 

வாசக சாலையின் இந்த இலக்கிய கூட்டம், மாலைப் பொழுதை இனிய இலக்கியப் பொழுதாக்கியது.

 

-மதி

சார்ந்த செய்திகள்