Skip to main content

மோடியை விரட்டியடித்த தமிழ்நாடு...!

Published on 27/01/2019 | Edited on 27/01/2019

 

கடந்த முறை தமிழ்நாட்டுக்கு வந்த மோடிக்கு கருப்புக்கொடி காட்டுவோம் என்று திமுக அறிவித்திருந்தது. அதனால் அவருடைய பயணத்திட்டத்தை சாலை வழியே அமைக்காமல் ஐஐடி காம்பவுண்ட் சுவரையெல்லாம் இடித்து பாதுகாப்பாக கருப்புக்கொடி கண்ணில் படாமல் அழைத்துச் சென்றார்கள். ஆனாலும் உலகம் முழுவதும் ட்விட்டரிலும், முகநூலிலும் கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக் பரப்பியும் ராட்சத கருப்புப்பலூன்களை வானில் பறக்கவிட்டும் மோடியை கடுப்பேற்றினார்கள்.

 

modi

 

மோடியின் தமிழ்நாடு விரோத செயல்களை தமிழ்நாட்டு மக்கள் எந்த அளவுக்கு வெறுக்கிறார்கள் என்பதை காட்டுவதற்கு இன்னொரு வாய்ப்பாக ஜனவரி 27 ஆம் தேதி மீண்டும் அமைந்தது. 2014 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் 13 இடங்களில் எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டப்போவதாக வாய்ச்சவடால் விட்டார் மோடி. ஆனால், நான்கரை ஆண்டுகள் அதைப்பற்றி கவலைப்படாமல் ஆட்சி முடியப்போகிற கடைசி மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டுகிறேன் என்று வந்தால் அது ஏமாற்று வித்தை என்பது யாருக்குத்தான் புரியாது?

 

 

கஜா புயல் நிவாரண நிதியாக 350 கோடியை மட்டும் ஒதுக்கிவிட்டு, பாதிக்கப்பட்ட மக்களை புழுக்களினும் கேவலமாக கருதி புறக்கணித்த மோடியை எப்படி தமிழக மக்கள் முகம் மலர்ந்து வரவேற்பார்கள்? இருந்தாலும் தேர்தல் வருகிறதே…. கூட்டணி அமைக்கனுமே என்ற குறுகிய எண்ணத்தில் தமிழகம் வந்தார் மோடி.

 

 

அதுவும் விமான நிலையத்திலிருந்து  3 கிலோமீட்டர் தொலைவில் ஒரு மைதானத்தை தேர்வு செய்து, மீட்டிங் ஏற்பாடு செய்தார்கள். கூட்டத்திற்கு அதிமுகவினரையும் அழைத்துவரும்படி கேட்டிருக்கிறார்கள். ஆனால், அதிமுகவினரை அழைத்துவந்து பாஜக கூட்டமாக காட்ட அந்தக் கட்சியின் தலைவர்கள் ஒப்புக்கொள்ளவில்லையாம். பாஜகவின் தமிழ்நாடு லெட்சணத்தை மோடியே நேரடியாக பார்த்துச் செல்லட்டும் என்று அதிமுக தலைவர்கள் விட்டுவிட்டார்களாம்.

 

 

modi

 

எனவே, மிகவும் சிரமப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள வடநாட்டு ஆட்களையும், கொஞ்சம் சவுராஸ்டிரா ஆட்களையும் சேர்த்து 3 ஆயிரம் சேர்களில் நிரப்பியிருக்கிறார்கள். கூட்டத்திற்குள் அனுமதிப்பதற்கு முன்பாக அவர்களிடம் கருப்புக்கொடி ஏதாச்சும் இருக்கிறதா என்று செக்கப் செய்து அனுப்பியிருக்கிறார்கள்.

 

 

கூட்டத்திற்காக போட்ட சேர்களில் அப்போதும் முழுக்க ஆட்களை நிரப்பமுடியவில்லையாம். எனவேதான், மோடியின் நிகழ்ச்சியை கவர் செய்ய வந்திருந்து மீடியாக்களின் கேமராக்களை கூட்டத்தை நோக்கி திருப்ப வேண்டாம் என்று கூறிவிட்டார்களாம். இது தொலைக்காட்சிகளைப் பார்த்துக்கொண்டிருந்த மக்களுக்கு நன்றாக புரிந்தது.

 

 

modi

 

கூட்டத்தில் மேடையின் இருபக்கமும் டெலிப்ராம்படரை வைத்துக்கொண்டு மோடி இந்த முறை ஆங்கிலத்தில் வாசித்தார். அவருடைய குரலிலும், முகத்திலும் சுரத்தே இல்லை. வாடிப்போயிருந்தார். கோபேக் மோடி என்ற ஹேஷ்டேக் இந்த முறையும் உலக அளவில் முதலிடத்தை பிடித்தது. அதுவும்போக மதுரையில் மதிமுக உள்ளிட்ட பல அமைப்புகள் கருப்புக்கொடி போராட்டம், சாலை மறியல் என்று நடத்திய செய்தி வேறு மோடிக்கு கடுப்பை ஏற்றியிருந்தது.

 

 

எல்லாவற்றுக்கும் மேலாக, பாஜகவுக்கு 10 தொகுதிகளை இறுதிசெய்ய ஏற்பாடு செய்திருந்தார்களாம். அதையும் எடப்பாடியும் ஓபிஎஸ்சும் ஒப்புக்கொள்ளவில்லையாம். இதுவேறு மோடிக்கு விரக்தியை ஏற்படுத்தி இருக்கிறது. அதனால்தான் மிகச்சுருக்கமாக விழாவை முடித்த மோடி கிளம்பிவிட்டார். தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தோ, தேசியகீதமோ பாடவில்லை என்பது வேறு பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்