காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நடுவழியில் ஓடும் ரயிலை நிறுத்தி போராட்டம்.
சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காலை 8 மணிக்கு ராமேஸ்வரம் - மாண்டுவாதி இரயில் சிதம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு 1 கி.மீ தொலைவு வந்துகொண்டு இருந்த போது கோவிந்தசாமி தெரு ரயில்வே கேட் அருகே கட்சியினர் மற்றும் கரும்பு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் ரவீந்திரன் தலைமையில் ஓடும் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினர் அங்கு இல்லாததால் அரை மணி நேரத்திற்கு மேலாக இரயில் தண்டவாளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசையும், மோடியையும் கண்டித்து கோசங்கள் எழுப்பினார்கள்.
இதனை காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். இதனால் இரயில் 30 நிமிடத்திற்கு மேல் தாமதமாக புறபட்டு சென்றது. இதேபோல் கிள்ளையில் திமுகவின் தலைமைக்குழு உறுப்பினர் கிள்ளைரவீந்திரன் தலைமையில் விழுப்புரம்- மயிலாடுதுறை பயணிகள் ரயிலை மறித்து 150க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Published on 05/04/2018 | Edited on 05/04/2018