தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார்.
தற்பொழுது நாகலாந்து மாநில ஆளுநராக இருந்து வருகிறார் ஆர்.என்.ரவி. பீகார் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான ஆர்.என்.ரவியின் முழு பெயர் ரவீந்திர நாராயண ரவி. 1976ஆம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்ற ஆர்.என். ரவி கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்.பல்வேறு மத்திய அரசு பணிகளிலும், மாநில அரசு பணிகளிலும் பணியாற்றியவர். அதேபோல் தமிழக ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஆர்.என்.ரவிக்கு தமிழக முதல்வர் மு.க .ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் சமூகவலைத்தள பக்கத்தில், 'தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் மாண்புமிகு ஆர்.என்.ரவி அவர்களுக்கு எனது வணக்கமும் வாழ்த்தும்! தங்களது வருகை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஊக்கமளிப்பதாக இருக்கட்டும்! தங்களை தமிழ்நாடு வரவேற்கிறது!'என தெரிவித்துள்ளார்.