Published on 11/01/2022 | Edited on 11/01/2022
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது, கைது செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அண்மையில் ராமேஸ்வரத்தை சேர்ந்த 48 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி 10 க்கும் மேற்பட்ட படகுகள் மீது கற்களை எரிந்து விரட்டியதாக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படை மீனவர்களின் வலைகளை வெட்டியதால் நஷ்டத்துடன் தமிழக மீனவர்கள் கரை திரும்பி உள்ளனர்.