இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் மாற்றுத் திறனாளி வீரர்கள் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கி, அரசாணை பிறப்பித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. இவ்விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி, தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக துணை வேந்தர். டாக்டர். சுந்தர், தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் விளையாட்டு சங்க செயலாளர் கிருபாகர ராஜா, தமிழ்நாடு பாரா ஒலிம்பிக் சங்க பொருளாளர் விஜய சாரதி, தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர். சிம்மச்சந்திரன், கேல் ரத்னா விருது பெற்ற பாரா ஒலிம்பிக் பதக்க வீரரான திரு. மாரியப்பன், தியான்சந்த் விருது பெற்ற ரஞ்சித் குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.