Skip to main content

எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பொன்.ராதாகிருஷ்ணன் அலுவலகத்தில் புகார்

Published on 21/04/2018 | Edited on 21/04/2018


 

​   ​Nagercoil 001.jpg


நடிகரும் பா.ஜ.க பிரமுகருமான எஸ்.வி. சேகா் 19.4.2018ல் தனது முகநூலில் பெண் நிருபா்களை கொச்சைப்படுத்தி தரக்குறைவாக கருத்து ஓன்றை பதிவு செய்திருந்தார். இதற்கு தமிழகம் முமுவதும் பத்திரிக்கையாளர்கள் எஸ்.வி.சேகரை கண்டித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனா். இதன் ஒரு கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் காவல் நிலையங்களில் எஸ்.வி.சேகா் மீது புகார் மனு கொடுத்துள்ளனா்.
 

இந்த நிலையில் நாகா்கோவில் பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் எஸ்.வி.சேகா் கருத்துக்கு எதிர்ப்பு மற்றும் கண்டனம் தெரிவித்து இன்று குமரி மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. 

 

Nagercoil 001.jpg


 

இதனை தொடா்ந்து நாகா்கோவிலில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் அலுவலகத்தில் அவருடைய உதவியாளா் சுந்தரிடம் எஸ்.வி.சேகா் மீது பாஜக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்த கேட்டு மனு கொடுக்கபட்டது. இதில் அனைத்து பத்திரிக்கையாளர்களும் கலந்து கொண்டனர். 
 

சார்ந்த செய்திகள்