Published on 17/10/2019 | Edited on 17/10/2019

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையிலுள்ள பேரறிவாளன் ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி செய்த மனுவை விசாரணைக்கு ஏற்று கொள்வதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேட்டரி வாங்கி கொடுத்ததாக பேரறிவாளன் தண்டனை பெற்று சிறை அனுபவித்து வரும் நிலையில் ஆயுள் தண்டனையை நிறுத்திவைக்கக் கோரி பேரறிவாளன் தொடுத்த மனு கடந்த ஓராண்டாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் இருந்தது. இந்நிலையில் அந்த மனு வரும் நவம்பர் 5 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.