Published on 24/03/2022 | Edited on 24/03/2022
நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடற்கரையில் திடீரென சூழல் காற்று வீசியதால், மீனவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.
படகுத்துறைமுகம் அருகே கடல் பகுதியில் இருந்து வந்த சூழல் காற்று கரை அருகே வந்தபோது, வேகம் அதிகரித்து சுழன்றடித்தது. இதனால் கடற்கரையில் இருந்த மீன்பிடி வலைகள், எடைக் குறைந்த பொருட்கள் தூக்கியெறியப்பட்டு, சுழன்று கீழே விழுந்தன. திடீரென ஏற்பட்ட சுழல் காற்றால் மீனவர்கள் அச்சமடைந்தனர்.
இது தொடர்பான, வீடியோ ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.