கும்பகோணத்தில் தொடரும் மாணவர்கள் போராட்டம்
அனிதாவின் படுகொலையைக் கண்டித்து கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று (05.09.2017) இரண்டாவது நாளாக தங்களது போராட்டத்தைத் துவங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் மாணவிகளும் பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அரசு கல்லூரி மாணவ, மாணவிகள் வருமானவரித்துறை அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்றனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட மாணவியரும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். போராட்டம் வலுக்கும் என போலிஸ், மாணவர்களைப் பாதியில் தடுத்து நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து மாணவ ,மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
- க.செல்வகுமார்