Published on 21/03/2021 | Edited on 21/03/2021

கடந்த சில நாட்களாகவே தஞ்சையில் பள்ளிகளில் கரோனா தொற்று என்பது அதிகரித்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் 460 மாணவிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் மொத்தம் 56 மாணவிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் 350 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், பெற்றோர்கள் 9 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று 10 பள்ளிகளில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளில் 168 மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.