Skip to main content

பிளாஸ்டிக் தடை; 1 லட்சம் அபராதம்; புதிய சட்ட மசோதா தாக்கல்!!

Published on 13/02/2019 | Edited on 13/02/2019

 

 Plastic barrier; 1 lakh fine; New bill to file

 

2019-20 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம்  சட்டசபையில் நடந்து வருகிறது. மூன்றாம் நாள் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெற்று வருகிறது.

 

நெகிழி(பிளாஸ்டிக்) தடையை மீறினால் அபராதம் விதிப்பதற்கான மசோதாவும் இன்று சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் 1 லட்சம் அபராதம் விதிக்க சட்ட மசோதா இன்று பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  

 

இந்த சட்ட மோசோதாவில், பிளாஸ்டிக் தடையை மீறி பயன்படுத்தி முதல்முறை சிக்கினால் 25 ஆயிரம் இரண்டாம் முறை 50 ஆயிரம் மூன்றாம் முறை சிக்கினால் 1 லட்சம் என அபராதம் வசூலிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. பிளாஸ்டி தடை பற்றி  அரசாணை வெளியிடப்பட்டு நடைமுறையிலுள்ள நிலையில் தற்போது பிளாஸ்டிக் தடை மற்றும் அபராதம் தொடர்பான சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்