நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி
மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
மோடி தலைமையிலான மத்திய அரசு நீட் தேர்வை ரத்து செய்யவேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தினர் இணைந்து புதுக்கோட்டையில் புதன்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் கே.மனோகரன், மாணவர் பெருமன்றத்தின் மாவட்டத் தலைவர் ம.உதயகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர், மாணவர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் செல்லமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கோரிக்கைகளை விளக்கி மாணவர் சங்க மாவட்ட துணைத் தலைவர் சபரி, துணைச் செயலாளர் சங்கர் மற்றும் பரத்குமார், விக்கி, வசந்தி, விஷாலினி, மாணவர் பெருமன்றத்தின் சார்பில் விஜய், சுதாகர், மணி உள்ளிட்டோர் பேசினர்.
- பகத்சிங்