காவிரி ஆற்றில் நீர் திறப்பு அதிகரித்துள்ளதால் மேட்டூர், பவானி ஆகிய இடங்களில் பல இடங்களில் கரையோர பகுதிகளில் இருக்கும் வீடுகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது.
இந்நிலையில் மறுபுறம் திருப்பத்தூர் மாவட்டத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், இன்று ஆம்பூர் பகுதியில் மாலை வரை தொடர்ந்து மழை பொழிந்ததால் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இதன் காரணமாக அரங்கள் தூர்கம் செல்லும் பகுதியில் இருக்கக்கூடிய தரைப்பாலமானது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இதன் காரணமாக இன்று மாலை பள்ளி முடிந்து வீடுகளுக்குத் திரும்பிக் கொண்டு இருந்த மாணவர்கள் ஆபத்தான முறையில் அந்த தரைப்பாலத்தின் மீது ஓடிக் கொண்டிருக்கும் வெள்ளை நீரைப் பொருட்படுத்தாமல் ஆபத்தான முறையில் கடந்து சென்றனர். இந்த தரைப்பாலம் வழியாக கருங்கல் துர்க்கம், காரப்பட்டு, பாரதி நகர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட ஊர்களுக்குச் செல்லக்கூடிய பாதை துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் போக்குவரத்து இன்றி தவித்து வருகின்றனர்.