Skip to main content

2020-21 ஆம் கல்வியாண்டிற்கான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய அமைச்சர்கள்!

Published on 02/01/2021 | Edited on 02/01/2021

 

 Ministers present free bicycles for the academic year 2020-21

 

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பள்ளிகளில் பயிலக்கூடிய 11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி, மடிக்கணினி கொடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்திருந்தார். அதன் தொடர்ச்சியாக அந்த திட்டத்தின் கீழ், 2020-2021 ஆம் கல்வி ஆண்டிற்கான விலையில்லா மிதிவண்டி வழங்கும் திட்டம், இன்று திருச்சி தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளியில் நடைபெற்றது.

 

திருச்சி மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலக்கூடிய பதினோராம் வகுப்பு மாணவ மாணவிகள் மொத்தம் 24,587 பேருக்கு, 9,68,87,817 ரூபாய் மதிப்பில் விலையில்லா மிதிவண்டி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக, முதற்கட்டமாக திருச்சி கிழக்கு, மேற்கு, திருவெறும்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள மாணவர்கள் 3,284 பேருக்கும், மாணவிகள் 4,719 பேருக்கும் என மொத்தம் 8,003 பேருக்கு, 3,14,97,271 மதிப்பிலும், ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள மாணவர்கள் 1,109 பேருக்கும், மாணவிகள் 1,510 பேருக்கும் என மொத்தம் 2,619 பேருக்கு 1 கோடியே 3 லட்சத்து 8 ஆயிரத்து 797 ரூபாய் மதிப்பிலும் இன்று மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

 

இன்று முதல் துவங்கிய இந்தத் திட்டம், இரண்டு மூன்று கட்டங்களாகப் பிரித்து திருச்சி மாவட்டத்தில் உள்ள மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி கொடுத்து முடிக்கப்படும் என்றும், தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய அணைத்து மாணவ மாணவிகளுக்கும் விரைவில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும் என்றும் அரசு அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இவ்விழாவில், அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், அமைச்சர் வளர்மதி, மாவட்ட ஆட்சியர் சிவராசு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்