Skip to main content

'கோயிலில் தமிழில் அர்ச்சனை செய்ய தடையில்லை' - உயர் நீதிமன்றம்!

Published on 03/09/2021 | Edited on 03/09/2021

 

TAMILNADU TEMPLES CHENNAI HIGH COURT ORDER

 

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதை எதிர்த்து ரங்கராஜன் நரசிம்மமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கு இன்று (03/09/2021) சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, "எந்த மொழியில் அர்ச்சனை செய்வது என்பது பக்தர்களின் விருப்பத்துக்கு உட்பட்டது. குறிப்பிட்ட மொழியில்தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் வற்புறுத்த முடியாது. கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்ய எந்த தடையும் இல்லை என ஏற்கனவே தீர்ப்புகள் உள்ளன" எனக் கூறிய நீதிபதிகள், தமிழில் அர்ச்சனை செய்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்