Skip to main content

முந்திரிக்காடுகளை அழித்து விட்டு தைல மரங்களை நட முயன்றால் போராட்டம்: மெய்யநாதன் எம்.எல்.ஏ பேச்சு!

Published on 22/07/2019 | Edited on 22/07/2019


புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 75 ஆயிரம் ஏக்கர் காப்புக்காடுகள் இருந்த போது மழை குறைவில்லாமல் பெய்துள்ளது. நிலத்தடி நீரும் மேலே இருந்தது. ஆனால் தற்போது சுமார் 6 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே காப்புக்காடுகள் உள்ளது. 69 ஆயிரம் ஏக்கரில் தைல மரக்காடுகள் வளர்க்கப்படுவதால் நிலத்தடி நீர் மட்டுமின்றி காற்றில் உள்ள ஈரப்பதத்தையும் உறிஞ்சி எடுத்துவிட்டு அதிகமான அனல் காற்றை தைல மரங்களும், சீமைக்கருவேல மரங்களும் வெளியிடுகிறது. அதனால் இவற்றை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தனபதி தலைமையில் மணிகண்ணடன் முன்னிலையில் 20 நாட்களாக பிரச்சார கலைப்பயணம் கிராமங்கள் தோறும் சென்று வருகிறது. 20 வது நாளில் கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் கிராமத்தில் பிரச்சாரப்பயணத்தை ஆலங்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மெய்யநாதன் எம்.எல்.ஏ தொடங்கி வைத்து பேசினார்.

 

 

Struggling to destroy coconut trees and try to plant oily trees: Meyyanathan MLA talk!

 

 

 

அவர் பேசியதாவது.. கீரமங்கலத்தை சுற்றி பல கிராமங்களில் முந்திரிக்காடுகள் சுமார் ஆயிரம் ஏக்கரில் முந்திரிக்காடுகள் வனத்துறைக்கும் வனவிலங்குகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது. ஆனால் தற்போது அந்த காடுகளை அழிக்க தொடங்கி இருக்கிறார்கள். அதில் தைல மரக்கன்றுகளை நட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அழிக்கப்படும் முந்திரிக்காட்டில் பலவகை மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று இளைஞர்கள் மனு கொடுத்திருக்கிறார்கள். ஆனால் வனத்துறை தைல மரக்கன்றுகளை நட முயன்றால் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தின் நீராதாரத்தை அழித்து விவசாயிகளில் வாழ்வாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கும் தைல மரக்காடுகளையும், சீமைக்கருவேல மரங்களையும் அரசாங்கமே முற்றிலும் அகற்ற வேண்டும். காவிரி- குண்டாறு இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று சட்டமன்றத்தில் 3 எம்.எல்.ஏக்கள் கோரிக்கை வைத்துள்ளோம்.

 

Struggling to destroy coconut trees and try to plant oily trees: Meyyanathan MLA talk!

 

அதே போல நீர்நிலைகளில் குளம், ஏரி, கரைகள், பொது இடங்களில் நிலத்தடி நீரை சேமிக்கும் பனை மரங்களை அரசாங்கமே வளர்க்க வேண்டும் என்றார். விழாவில் முன்னால் பனங்குளம் முன்னால் ஊராட்சி மன்த்தலைவர்கள் மோகன்ராசு, கருணாகரன், சமூக ஆர்வலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கலை நிகழ்ச்சிகளும் நடந்தது. தொடர்ந்து கீரமங்கலம், புளிச்சங்காடு கைகாட்டி உள்பட பல கிராமங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு கையெழுத்து இயக்கமும் நடந்தது. தைல மரங்களை அழிக்க வேண்டும் என்று இதுவரை சுமார் 5 ஆயிரம் விவசாயிகள் கையெழுத்திட்டுள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்