Skip to main content

கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்று, மழை

Published on 20/08/2017 | Edited on 20/08/2017
கடலூர் மாவட்டத்தில் பலத்த காற்று, மழை



இன்று மாலை கடலூர் மாவட்டம் கடலூர், நெய்வேலி, விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பொழிந்தது. காற்று மழையில் பதாகைகள் கிழிந்து சரிந்தன. திட்டக்குடி அருகே அரங்கூர் கிராமத்தில் ராமநத்தம்-திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் பழங்கால புளியமரம் சாலையில் விழுந்தது. இதனால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. வாகனங்கள் அனைத்தும் லப்பைகுடிக்காட்டு சாலையில் மாற்றி விடப்பட்டது. ராமநத்தம், திட்டக்குடி போலீசார் மற்றும் நெடுஞ்சாலைதுறையினர் மரத்தை அகற்றி சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

- சுந்தரபாண்டியன்

சார்ந்த செய்திகள்