தஞ்சை மாவட்டம் பேராவூரணியில் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் திருநாவுக்கரசர்...
நான் இது போன்ற மேடைகளில் அரசியல் பேசமாட்டேன். ஆனாலும் சொல்கிறேன் விரைவில் தேர்தல் வரப்போகிறது நல்லவர்களை பார்த்து வாக்களிக்க வேண்டும். பணத்துக்காக ஓட்டு போட்டுட்டு அப்பறம் இப்ப போல அவதிப்படக் கூடாது என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
திமுக, காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், மதிமுக, விசிக உள்ளிட்ட சுமார் 10 கட்சிகள் தொடர்ந்து கூட்டணியாகவே செயல்பட்டு வருகிறோம். தேர்தல் அறிவிப்பு வந்ததும் தொகுதிகளை ஒதுக்கிக்கொண்டு களத்திற்கு செல்வோம். அதற்காக தலைவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
அதிமுகவில் அமைச்சர்களின் வாரிசுகளை களமிறக்க விருப்பமனு வாங்கி இருக்காங்களே, உங்கள் மகன் ராமச்சந்திரன் மீண்டும் போட்டியிடுவாரா?என்ற கேள்விக்கு
என் மகன் ராமச்சந்திரன் சட்டமன்ற தேர்தலில் வாய்ப்பு கிடைத்து போட்டியிட்டார். இது பாராளுமன்ற தேர்தல், யாருக்கு சீட்டு என்பதை தலைவர் ராகுல்காந்தி தான் முடிவு செய்வார்.
அதேபோல தமிழக தலைவர் மாறியதும் என் மகன் வகித்த தகவல் தொழில்நுட்ப பதவியையும் ராஜினாமா செய்தார். இதற்கு யாருடைய அழுத்தமும் காரணம் இல்லை. நான் தலைவராக இருக்கும்போது, நான் கட்சிப்பணி செய்யும் செய்திகள் அதிகமாக சமூக ஊடகங்களில் வரவேண்டும் என்று என்னுடன் இருந்தார். இப்போது புதியதலைவர் ஒருவரை நியமித்திருக்கிறார். மேலும் தமிழக காங்கிரஸ் கட்சியில் இரண்டரை ஆண்டுகள் பதவி வகித்த தலைவர் நான்தான் என்றார்.
அதிமுக பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு, இரு கட்சிகள் மீதும் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள். அதனால் அந்த கட்சிகளில் இணையும் மற்றவர்களும் வெற்றிபெற முடியாது என்றார்.