Published on 26/03/2018 | Edited on 26/03/2018

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 27 தமிழக மீனவர்கள் விடுதலை, இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழகம், புதுச்சேரி மீனவர்களுக்கு சொந்தமான 184 விசைப்படகுகள் விடுதலை, குந்துகாலில் மீன்பிடி இறங்குதலம் அமைக்க வேலையை துரிதபடுத்தல் மற்றும் இந்திய இலங்கை மீனவர்களின் பேச்சுவார்த்தை நடத்த மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான்கு அம்ச கோரிக்கையை வலியுறுத்தி இராமேஸ்வரம் மீனவர்கள் வரும் சனிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இன்று நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் தீர்மானமாக இயற்றி வேலை நிறுத்தப் போராட்டத்தினை அறிவித்தனர்.