திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் தேசியத் துணைத் தலைவர் தெஹலான் பாகவி பங்கேற்றார். அதன் பின் பத்திரிகையாளரிடம் பேசியவர், “பாரதிய ஜனதா நாட்டின் மிகப்பெரிய ஊழல் கட்சியாக உருவெடுத்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடித்ததுபோல், தற்போது புதுச்சேரியிலும் பாரதிய ஜனதா தனது சித்து வேலையைக் காட்டியுள்ளது. மிகப்பெரிய ஊழல் முறைகேடாக சட்டமன்ற உறுப்பினர்களை ரூபாய் 100 கோடிவரை குதிரை பேரம் மூலம் விலைக்கு வாங்கி ஆட்சியைக் கவிழ்த்து ஜனநாயகப் படுகொலை செய்துள்ளது.
தற்போது, தமிழகத் தேர்தல் களத்தில் மூன்றாவது அணி அமைவதற்கு வாய்ப்பு இல்லை. அப்படியே, அது அமைந்தாலும் வலுவான அணியாக இருக்காது. பி.ஜே.பி., அ.தி.மு.க. கூட்டணியை எதிர்க்கும் எதிர்க்கட்சிகளை தி.மு.க. அரவணைத்துச் சென்று தேர்தலைச் சந்திக்க வேண்டும்” என்று பேசினார்.