Skip to main content

வினோத நோய்.... ஒதுக்கப்படும் மாணவர்கள்..

Published on 07/07/2018 | Edited on 07/07/2018

கண்டறியபடாத விநோத நோயால் தாக்கப்பட்டு, உடல் எரிச்சலாலும் சூட்டாலும் உடம்பு பாளம் பாளமாக பிளந்து மணிக்கு ஒரு தடவை நீரில் மூழ்கி நோயின் கடுமையை குறைத்து நோயுடன் போராடி வருகின்றனர் சிவகங்கை அருகேயுள்ள மகா சிவநேந்தல் கிராமத்தில் உள்ள 3 மாணவர்கள்.

 

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை அருகேயுள்ள மகா சிவநேந்தல் கிராமத்தை சேர்ந்தவர்கள் கண்ணன் காளீஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு ஐயப்பன் ,விஜய் எனும் இரு மகன்கள். அதே ஊரை சேர்ந்த நாகராஜ் பொன்மதி தம்பதியினர் மகன் நவீன் ஆகிய 3 பேருமே இந்த விநோத நோய் தாக்கத்திற்கு ஆளானவர்கள். உரிய சிகிச்சை கிடைக்காமல் ஆண்டுக் கணக்கில் அவதி அடைந்து வரும் இந்த சிறுவர்களில் இதே ஊரிலுள்ள பள்ளியில் விஜய் பதினொன்றாம் வகுப்பும், ஐயப்பன் 6ம் வகுப்பும் மற்றும் நவீன் 3ம் வகுப்புமாக கல்வி பயின்று வருகிறார்கள்.

 

Strange disease

 

 

 

இந்த நோயின் தாக்கத்தால், முடி உதிர்ந்து உடல் கை, கால் முழுவதும் வெடிப்பு, எப்போதும் எரிச்சல் சூடு என அவதி அடைந்து வரும் இவர்கள், இதனைக் கட்டுப்படுத்த அவ்வவ்ப்போது தண்ணீருக்குள் மூழ்கி நோயின் வேகத்தை தனிக்கின்றனர். பள்ளிக்கு சென்றாலும், மணிக்கொரு தடவையாவது பள்ளியிலுள்ள குடிநீர் பைப் பை திறந்துவிட்டு தண்ணீரை உடலில் ஊற்றிகொண்டு  தங்களை காத்துக் கொள்கின்றனர். வெடிப்புக்களால் ஏற்படும் புண்களால் துர் நாற்றம் வீச, சக மாணவர்களின் முகம் சுளிப்புகளை சகித்துக்கொண்டும் கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது. 

 

Strange disease

 

இதுவரை என்ன நோய் என்றே கண்டறியாமலே சிகிச்சைக்கு மறுத்து அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையும், தனியார் மருத்துவமனையும் திருப்பி அனுப்பிவிடுகின்றனர் இவர்களை. கூலி தொழிலாளிகளான தங்களின் குழந்தைகளின் விநோதநோயைக் கண்டறிந்து குணபடுத்த அரசோ, தனியார் தொண்டு நிறுவனமோ ஆதரவு கரம் நீட்டினால் தான் விநோத நோயால் பாதிக்கபட்ட மாணவர்களுக்கு விமேசனம் கிடைக்கும் என்கின்றனர் பெற்றோர்கள்.

சார்ந்த செய்திகள்