Skip to main content

வாரம் 50 டன் ரேஷன் அரிசி கடத்தல் – ஆந்திராவை சேர்ந்த 5 பேர் கைது

Published on 26/10/2018 | Edited on 26/10/2018
an


வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் கண்ணனுக்கு வந்த ஒரு தகவலில், வாணியம்பாடியில் இருந்து ஆந்திரா குப்பத்துக்கு லாரியில் ரேஷன் அரசி கடத்துகிறார்கள் என்கிற ரகசிய தகவலின் அடிப்படையில் வாணியம்பாடி தாலுக்கா காவல்நிலைய போலிஸார் உதவியுடன் அக்டோபர் 25ந்தேதி இரவு தமிழக – ஆந்திரா எல்லையில் உள்ள தேவராஜ்புரத்தில் உள்ள சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டனர்.


அப்போது சந்தேகத்துக்கிடமாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தினர். அந்த வாகனத்தில் வந்த ஒருவர் முன்னுக்கு பின் முரணாக தகவல் கூறியதால் அவரை பிடித்து வைத்துக்கொண்டனர். அதேபோல் ஆந்திரா பதிவெண் கொண்ட டாடா சுமோ ஒன்று வர அதையும் பிடித்துக்கொண்டனர்.

 

an


அப்போது ரேஷன் அரிசி ஏற்றிவந்த ஒரு லாரி சோதனை சாவடியில் நிற்காமல் மிகவேகமாக சென்றது. அந்த லாரியின் பின்னால் வந்த ஆந்திரா பதிவெண் கொண்ட ஒரு காரை தடுத்து நிறுத்தினர். காரில் இருந்த இருவரிடம் விசாரித்தபோது, அவர்கள் ஆந்திரா மாநிலம் பொத்தூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும், தமிழகத்தில் ரேஷன் அரிசியை வாங்கிச்சென்று ஆந்திராவில் பாலிஸ் போட்டு விற்பனை செய்யும் கும்பல் என தெரியவந்தது. இருசக்கர வாகனம் ஒன்று, இரண்டு கார்களை பறிமுதல் செய்தனர். 5 பேரை கைது செய்தனர். தப்பி சென்ற லாரிப்பற்றிய தகவல்களை வாங்கி இதுப்பற்றி சித்தூர் மாவட்ட போலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


ஒவ்வொரு வாரமும் 50 டன் அரிசியை தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு கடத்தியுள்ளனர். இவர்களுக்கு வாணியம்பாடி, ஆம்பூர், நாட்றாம்பள்ளியில் பெரும் கடத்தல் நெட்ஒர்க் இருப்பதை அறிந்தனர். என்ன காரணம்மோ, போலிஸார் அதுப்பற்றிய தகவல் எதையும் வெளியிடாமல் மறைத்துவிட்டனர், அவர்களுக்கு தமிழகத்தில் உதவி செய்பவர்கள் யாரையும் கைது செய்யவில்லை, விசாரிக்கவுமில்லை என குற்றம்சாட்டப்படுகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

மாணவர்களுக்கு நிர்வாண தண்டனை! -இப்படியும் ஒரு கொடூர பள்ளி!

Published on 27/12/2018 | Edited on 28/12/2018
​punishment

 

இந்தியாவின் வளர்ச்சி மாணவர்களின் கையில்தான் இருக்கிறது என்பதை ஆசிரியர்களும் பள்ளி நிர்வாகமும் எந்த அளவுக்குப் புரிந்து நடக்கின்றனர்? அவ்வப்போது இதுபோன்ற கேள்விகள் எழுகின்றன. ஏனென்றால், கண்டிப்பு என்ற பெயரில்,  பள்ளிகளில்  கசப்பான  சில சம்பவங்கள் நடந்துவிடுகின்றன. 
மாணவன் என்றால் மாண்+அவன் என்று பிரிக்கலாம். மாண் என்றால் பெருமை. மாணவன் என்றால் பெருமைக்குரியவன். அதாவது, மாண்புடையவன் என்று பொருள். இந்த மாணவர்கள் நம் தேசத்தில் எப்படி நடத்தப்படுகின்றனர்? காலதாமதமாக பள்ளிக்கு வரும் மாணவர்கள், வீட்டுப்பாடம் எழுதாத மாணவர்கள், நன்றாகப் படிக்காதவர்கள்.

 

வகுப்பு நேரத்தில் பேசிக்கொண்டிருப்பவர்கள், இதுபோன்ற சிறு தவறுகளைச் செய்யும் மாணவர்களை, வெயிலில் மணிக்கணக்கில் நிற்க வைக்கின்றனர்; பிரம்பால் அடிக்கின்றனர்; தரையில் முட்டி போடச் சொல்கின்றனர். இதைக்காட்டிலும் கொடுமைகள் இழைக்கப்படுகின்றன.   சக மாணவர்கள் முன்னிலையில் அவமானப்படுத்தப்பட்டு, மனரீதியாகவும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். எக்காரணம் கொண்டும் உளவியல் ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ மாணவர்களுக்கு ஆசிரியர்கள் தண்டனை அளிக்கக்கூடாது என்று சட்டமே வரையறுக்கப்பட்டுள்ளது. இதையெல்லாம் மீறி, நம் நாட்டில் ஏதோ ஒரு மாநிலத்தில்,  எங்கோ ஒரு பள்ளியில், அசம்பாவிதம் நடந்துவிடுகிறது. 

 


ஆந்திர மாநிலம் - சித்தூர் மாவட்டம் - புங்கனூரில் உள்ள சைதன்யா பாரதி என்ற  தனியார் பள்ளி, மாணவர்களுக்கு அளித்த தண்டனை கொடுமையானது. பள்ளிக்குத் தாமதமாக வந்த ஐந்து மாணவர்களை, ஆடைகளைக் களையச் செய்து,  வகுப்பறைக்கு வெளியே, வெயிலில் நிற்க வைத்திருக்கின்றனர். அவர்களில் மூன்று மாணவர்களை முழுவதுமாக நிர்வாணப்படுத்தி உள்ளனர். இரு கைகளையும் தூக்கி நிற்கும்படி செய்திருக்கின்றனர். இந்தக் கொடுமையை, அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், செல்போனில் வீடியோ எடுத்து வெளியிட, ஆந்திர மாநிலம் பரபரப்பானது. இதுகுறித்து  அந்தப் பள்ளியில் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தி வருவதாகவும், நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும்  கல்வித்துறை அதிகாரிகள் கூறியிருக்கும் நிலையில், அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 

 

Next Story

மாணவியை காதலிக்க அவர் வீடு அருகே வாடகைக்கு வந்த ஆசிரியர்! கடைசி வரை காதலை ஏற்காததால் கழுத்தை அறுத்த கொடூரம்!

Published on 04/11/2018 | Edited on 04/11/2018
டெ

 

பள்ளியில் படிக்கும் மாணவியை எப்படியாவது தனது காதல் வலையில் சிக்க வைக்க வேண்டும் என்று அவரின் வீட்டருகே வாடகைக்கு வீடு எடுத்து தங்கியும் துரத்தி துரத்தி காதலித்து பார்த்தார் ஆசிரியர். அப்படியும் தனது காதலை ஏற்காததால் ஆத்திரம் அடைந்து கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்துள்ளார்.  அலறித்துடித்த மாணவிக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


ஆந்திர மாநிலம் கர்னூல் நகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியர் சங்கர்.  அப்பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தார். அந்த மாணவி ஆசிரியரின் காதலை ஏற்க தொடர்ந்து மறுத்து வந்ததால், ஆசிரியர் சங்கர் மாணவியின் வீடு அருகே வாடகைக்கு குடி சென்றார். அங்கிருந்தபடி மாணவிக்கு காதலை தெரிவித்துப்பார்த்தார். அப்படியும் சம்மதிக்கவில்லை.  ஆசிரியரின் இந்த தொந்தரவு பற்றி  பெற்றோரிடம் தெரிவித்தால் தன்னை பள்ளிக்கு அனுப்ப மாட்டார்கள் என்று பயந்து மாணவி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.


 
இந்நிலையில் நேற்று மாணவியின் பெற்றோர் வேலைக்கு சென்று விட்டதும்,   வீட்டில் தனியாக இருந்த மாணவியிடம்,  மது போதையில் சென்ற ஆசிரியர் சங்கர், தன்னை  காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். மாணவி தொடர்ந்து மறுப்பு தெரிவிக்கவே ஆத்திரம் அடைந்த சங்கர் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியின் கழுத்தை அறுத்தார். இதனால்  அவர் அலறி துடித்தப்படி கீழே விழுந்தார். உடனே சங்கரும் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.

 

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சங்கரை சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். படுகாயம் அடைந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.