Published on 26/11/2018 | Edited on 26/11/2018
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தமிழக அரசு முன்பு ஒரு சீராய்வு மனுவை தாக்கல் செய்திருந்தது. இதில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியது அரசின் கொள்கை முடிவு, ஆதலால் கொள்கை முடிவுகளில் தலையிடவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயத்திற்கும், நீதிமன்றத்திற்கும் அதிகாரம் இல்லை என்று கூறியிருந்தது. இதை விசாரித்த உச்சநீதிமன்றம் தேசிய பசுமை தீர்ப்பாயம் இந்த மனுவை விசாரிக்க எந்த தடையும் இல்லை எனக்கூறி அந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்தது. சீராய்வு மனுவை மறுவிசாரணை செய்யவேண்டுமென தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தது. தற்போது அதையும் தள்ளுபடி செய்துள்ளது, உச்சநீதிமன்றம்.