இந்திய அணுச்சக்தி கழகமான "Nuclear Power Corporation of India Limited" என்ற மத்திய அரசின் நிறுவனம் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ளது. இந்த நிறுவனத்தில் "EXECUTIVE TRAINEES - 2019" காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பாணையை வெளியிட்டது. இந்த பணியிடங்கள் " Graduate Aptitude Test In Engineering" (GATE EXAM SCORE) தேர்வின் மதிப்பெண்கள் மையமாக வைத்து பணியிடங்கள் நிரப்பப்படுகின்றனர்.

இதில் GATE-2017, GATE-2018, GATE-2019 தேர்வை எழுத்திய இளைஞர்கள் மதிப்பெண்களை மையமாக வைத்து விண்ணப்பிக்கலாம். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி (B.E, B.Tech , M.Tech, B.Sc) ஆகும். மேலும் ( Mechanical , Electrical ,Chemical , Instrumentation , Civil, Electronics ) உள்ளிட்ட துறையில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் படித்தவர்களாக இருக்க வேண்டும். அதே போல் பட்டப்படிப்பில் மதிப்பெண்கள் குறைந்தப் பட்சம் சுமார் 60% மேல் இருக்க வேண்டும். இதனை தொடர்ந்து இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கான இணையதள முகவரி : www.npcilcareers.co.in , www.npcil.nic.in ஆகும். மேலும் ஆன்லைன் விண்ணப்பம் தொடங்கும் நாள் : 09-04-2019. விண்ணப்பிக்க கடைசி நாள் : 23-04-2019. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப கட்டணம் (OBC/ GENERAL) ரூபாய் - 500. மேலும் SC/ST பிரிவினருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ஆண் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.அதே போல் அனைத்து விண்ணப்பித்தாரர்களின் கல்வி மற்றும் GATE மதிப்பெண்கள் உள்ளிட்டவை ஆராய்ந்து அதிலிருந்து விண்ணப்பதாரர்களை தேர்வு செய்து NPCIL நிர்வாகம் நேர்காணலை நடத்தும்.

பின்பு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக பணி ஆணை வழங்கப்படும். NPCIL நிறுவனத்தில் பணியில் சேருவோருக்கு மத்திய அரசின் பேருந்து சலுகை , அரசு குடியிருப்பு , போனஸ் உள்ளிட்ட அனைத்து சலுகைக்களும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே பொறியியல் படித்த இளைஞர்களுக்கு இது ஓர் அறிய வாய்ப்பு.
பி. சந்தோஷ் , சேலம் .