Skip to main content

அதிமுக அரசைப் பொறுத்தவரை எங்களுக்கு எந்த நிறமும் கிடையாது- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து!

Published on 03/11/2019 | Edited on 03/11/2019

நேற்று பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்ட பதிவு ஒன்றில் ''கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்'' என்ற குறள் இடம்பெற்றிருந்தது. அந்த குறளுக்கான விளக்கமும் பதிவிடப்பட்டிருந்தது. அத்துடன் திருவள்ளுவர் காவி நிற உடையில் உள்ளது போன்ற படமும் பதிவிடப்பட்டிருந்தது. மேலும் அந்த படத்தில் திருவள்ளுவரின் நெற்றியில் திருநீறு பூசி, ருத்ராட்ச மாலை அணிந்த நிலையில் இருந்தார். ஆனால் தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் புகைப்படங்களில் திருவள்ளுவர் வெண்மை நிற உடையில் இருப்பார். 

இதற்கு பல்வேறு கட்சிகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பியுள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,  'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்! எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்! என்று குறிப்பிட்டுள்ளார். 
 

இந்நிலையில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இதுகுறித்து பதிலளிக்கையில்,

 

admk


அதிமுக அரசைப் பொறுத்தவரை எங்களுக்கு எந்த நிறமும் கிடையாது. அவரின் புகழ் உலகெங்கும் சென்றடைய வேண்டும் என்பதே அரசின் நோக்கம். எங்கோ பிறந்திருந்தாலும் தமிழ் கலைக்காக ரஜினி வேர்வை சிந்தி உள்ளார். அவருக்கு விருது கிடைத்ததில் மகிழ்ச்சி எனக்கூறியுள்ளார்.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்