Published on 19/01/2023 | Edited on 19/01/2023
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார்.
தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்தக் கூட்டத்தில் அரசு சார்ந்த முக்கிய அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காணொலி காட்சிகள் மூலம் காவல்துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளைக் குறித்தும் அதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் போதைப்பொருள் நடமாட்டத்தைக் குறைக்கும் வகையிலும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கொலை, கொள்ள, பாலியல் கொடுமை, போக்சோ வழக்குகளின் நிலை குறித்தும் காவல்துறை அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்.