Skip to main content

சரக்கு வாகனத்தில் ஆயிரம் கிலோ ரேஷன் அரிசியை கடத்தல்!

Published on 03/12/2024 | Edited on 03/12/2024
Smuggling of a thousand kilos of ration rice in a cargo vehicle

ஈரோடு காங்கேயம் சாலை, மூலப்பாளையம் அருகே ரேஷன் அரிசியை விற்பனைக்காகக் கடத்தி செல்வதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதன்பேரில், மாவட்ட குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் சுதா, சப்- இன்ஸ்பெக்டர் மேனகா தலைமையிலான போலீசார் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, அவ்வழியாக சந்தேகப்படும்படியாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வாகனத்தில் 1,075 கிலோ ரேஷன் அரிசி விற்பனைக்காக கடத்தி செல்லப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, வாகனத்தை ஓட்டி வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தியதில், அவர் ஈரோடு அருகே வெண்டிபாளையத்தை சேர்ந்த அர்த்தநாரீஸ்வரன் (40) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர். அர்த்தநாரீஸ்வரனிடம் இருந்து 1,075 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சார்ந்த செய்திகள்