நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மாநில கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
‘நீட்’ தேர்வினால் எம்.பி.பி.எஸ். மருத்துவம் படிக்கும் வாய்ப்பை இழந்த மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். அனிதாவின் தற்கொலைக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம் என்றும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் சென்னையில் இன்று மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாநில கல்லூரி, சென்னை பல்கலைக்கழக மாணவ- மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படங்கள்: அசோக்குமார்