Published on 21/01/2022 | Edited on 21/01/2022

திருச்சி அரியமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். இவர் நேற்று இரவு காமராஜர் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது 2 மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி, பணத்தைப் பறித்துச் சென்றனர்.
இது குறித்து ஐயனார் அரியமங்கலம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அரியமங்கலம் காமராஜர் பகுதியைச் சேர்ந்த ஒருவரும், கணேசன் ஆகிய இரண்டு வாலிபர்கள் அய்யனாரிடம் பணம் பறித்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.