தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகிறது. மற்ற வகுப்புகளுக்கு வரும் நவம்பர் முதல் தேதியிலிருந்து பள்ளி துவங்கும் என்று தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளி திறக்கப்பட்டதும் மாணவர்கள் சிலருக்கு அவ்வப்போது கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதுவரை 80க்கும் அதிகமான மாணவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் படிப்படியாகக் குணமாகி வருகிறார்கள்.
இந்நிலையில், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் மாணவிகள் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி வளாகம் மூடப்பட்டு வரும் 3ம் தேதி வரை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாணவிகளுடன் தொடர்பிலிருந்த அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.