பெண்களின் கல்வி மற்றும் முன்னேற்றத்துக்காக சென்னை கொளத்தூரில் தொடங்கப்பட்ட அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் 128 மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கினார்.
கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி அன்று, பன்னிரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்றும் நீட் தேர்வில் தோல்வி அடைந்து பின்பு உயிர் நீத்த அனிதாவின் நினைவாக அகாடமி ஒன்றை மு.க ஸ்டாலின் துவக்கி வைத்தார். அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் என்ற பெயர் கொண்ட இந்த பயிற்சி நிறுவனத்தில் 'டெலி கோர்ஸ்' பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், தேர்வு எழுதுவதற்கான முழு கட்டணத்தையும் இந்நிறுவனமே ஏற்று மாணவிகளுக்கு அனைத்தும் இலவசமாக வழங்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தின், முதல் பேட்சில் 61 மாணவிகளுக்கு பயிற்சி அளித்து 59 மாணவிகளுக்கு வேலை கிடைத்தது. இரண்டாவது பேட்சில் 67 மாணவிகளுக்கு பறிச்சி அளிக்கப்பட்டு 56 மாணவிகளுக்கு வேலை கிடைத்துள்ளது. அடுத்தடுத்த பேட்சுக்களில் மாணவிகள் சேர விண்ணப்பித்துள்ளனர்.
இன்று, இதுவரை அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயின்ற அனைத்து மாணவிகளுக்கும் 128 மடிக்கணினிகளை வழங்கினார்.