Skip to main content

ஸ்ரீவில்லிபுத்தூர் -நெடுங்குளத்தில் ஜல்லிக்கட்டு!

Published on 23/02/2020 | Edited on 23/02/2020

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டத்தில்,  ஜல்லிக்கட்டு விளையாட்டில் பிரசித்திபெற்ற நெடுங்குளத்தில், பரவைக் காளியம்மன் கோவில் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியை ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா கொடியசைத்து துவக்கி வைத்தார். மதுரை, தேனி, கம்பம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, கோயம்புத்தூர் மற்றும் விருதுநகர் என பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த 350 காளைகளும் 200 மாடுபிடி வீரர்களும் பங்கேற்ற இப்போட்டியில், குழு ஒன்றிற்கு 30 பேர் வீதம் களமிறங்கினர். இபோட்டியை, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் கண்ணன் மற்றும் சிவகாசி சார் ஆட்சியர் தினேஷ்குமார் பார்வையிட்டனர்.

வெற்றிபெற்ற காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு கட்டில், பீரோ, சைக்கிள், தங்கக்காசு மற்றும் வெள்ளிக் காசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் தரப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள் 21 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  

 

 

சார்ந்த செய்திகள்