முழு ஊரடங்கு நாளில் சேலத்தில் விதிகளை மீறியதாக 134 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சேலத்தில், கரோனா நோய்த்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சேலம் மாநகராட்சி சார்பில் 2000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு உள்ளது. இதற்காக 45 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
ஒரே தெருவில் 3 பேருக்கு மேல் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால், அந்த தெரு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,500க்கும் மேற்பட்டோர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த ஜனவரி முதல் தற்போது வரை முகக்கவசம் அணியாதது, சமூக இடைவெளியை கடைபிடிக்காதது உள்ளிட்ட விதிமீறல்களுக்காக 21 ஆயிரத்து 25 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஞாயிற்றுக்கிழமை (ஏப். 25) முழு ஊரடங்கின்போது தடை உத்தரவை மீறி வெளியே சுற்றியதாக காவல்துறை மூலம் 134 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.