கரூர் லைட் ஹவுஸ் கார்னர் அருகே உள்ள தந்தை பெரியார் சிலை முன்பாக இன்று காலை மே 17 இயக்கத்தின் சார்பாக படுகொலை செய்யப்பட்ட ஈழ தமிழர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
2009 ஆம் ஆண்டு ஈழ தமிழ் மக்கள் லட்சக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும் 10 ஆண்டுகள் நிறைவடைந்தை நினைவு கூறும் வகையில் ஆர்ப்பாட்டம் மற்றும் இறந்தோருக்கான அஞ்சலி செலுத்தும் விதமாகவும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதில் கரூரில் உள்ள பல்வேறு தமிழ் உணர்வு அமைப்பு பொறுப்பாளர்களுடன் வழக்கறிஞர் தமிழ் ராஜேந்திரனும் பங்கேற்றார். மேற்படி நிகழ்ச்சியில் சாமானிய மக்கள் கட்சி சார்பாக வழக்கறிஞர் குணசேகரன் மற்றும் சண்முகம் ஆகியோரும் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக கரூர் மாவட்ட செயலாளர் தனபால், ஆதித்தமிழர் பேரவை சார்பாக மாவட்ட செயலாளர் முல்லை அரசு, மே 17 இயக்கத்தின் கரூர் மாவட்ட செயலாளர் திலீபன், சமூக கல்வி மேம்பாட்டு கூட்டமைப்பு தலைவர் ஆசிரியர் ராமசாமி உட்பட பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.