Skip to main content

இந்தப் பாவத்தைச் செய்ய வேண்டாம் - வைகோ 

Published on 13/02/2019 | Edited on 13/02/2019
vaiko


ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த முத்தாயிபாளையத்தில் உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து பேசினார்.
 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, 
 

விளைநிலங்கள் வழியாக உயரமான கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிராக கட்சி பாகுபாடு இல்லாமல் அனைத்து விவசாயிகளும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும். விவசாய நிலத்தில் மின் கோபுரங்கள் அமைந்தால் அந்த நிலத்தின் மதிப்பு குறைந்து நிலத்தை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நசுக்கும் செயலை செய்யாதிங்க. அந்த போக்கை மத்திய மாநில அரசு கைவிட வேண்டும்.
 

பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் ஆயிரத்து 500 கிலோ வாட் மின்சாரத்தை கடலுக்கு அடியிலும் பூமிக்கு அடியிலும் கொண்டுசெல்ல அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஆனால் தமிழகத்தில் மட்டும் விவசாயிகளின் விளைநிலங்கள் வழியாக மின்சாரத்தை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 


உயர் மின்னழுத்த கோபுரத்திற்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவித்து இருந்தனர். ஆனால் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் உயர்மின் கோபுரத்துக்கு எதிராக போராடிய விவசாயிகளை மிரட்டுவது கைது செய்வது போன்ற செயல்கள் கண்டனத்துக்குரியது. முதலமைச்சரும் இந்தப் பாவத்தைச் செய்ய வேண்டாம். இவர் கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்