Published on 01/05/2019 | Edited on 01/05/2019
சென்னை பூந்தமல்லியிலுள்ள குடியிருப்பு வளாகத்தில் தங்கியுள்ள இலங்கையை சேர்ந்த மூவரிடம் என்.ஐ.ஏ. மற்றும் க்யூ பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மண்ணடியில் நடந்த விசாரணையில் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் இந்த விசாரணை நடக்கிறது என கூறியுள்ளனர். மேலும் இலங்கையை சேர்ந்த அந்த 3 பேர் தங்கியிருந்த வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. நேற்று குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் சில வீடியோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.